உலக அளவில் இந்தியாவில் புதியதாக தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் விரைவில் அப்துல்கலாம் கண்ட வல்லரசு கனவு நனவாகிவிடும் என்றே தோன்றுகிறது. உலகில் அதிக தொழிலதிபர்கள் உருவாகிய நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதே இதற்கு சான்று
இந்திய இளைஞர்கள் நல்ல வேலையில் இருந்தாலும் தங்களது புதுப்புது ஐடியாக்களின் மூலமும், இந்திய அரசின் உதவியாலும் புதுப்புது தொழில்களை தொடங்கி வெற்றி பெற்று வருகின்றனர். இதுகுறித்து தற்போது பார்ப்போம்
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
போல்ட்
போல்ட் ஆட்டோ டெக்னாலஜி கண்டுபிடித்தது ஒரு ஆட்டோமொபைல் சார்ஜர். டூவிலரில் இந்த சார்ஜரை பொருத்தி உங்கள் மொபைலுக்கு சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். அதுமட்டுமின்றி உங்கள் வண்டியின் வேகம், திசை உள்பட அனைத்தையும் கண்காணிக்கும் செயலியையும் இந்த போல்ட் பெற்றுள்ளது.
ஹேண்ட்பாரிலேயே இந்த சார்ஜரை பொருத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி யாரும் யாரும் இதை மிஸ்யூஸ் செய்துவிடாமல் பாதுகாக்கும் அம்சமும் இதில் உள்ளது.
டிராக் அண்ட் டெல் (Trak n Tell)
ஆட்டோமொபைல் உரிமையாளர்களூக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும் ஒரு அம்சம் தான் டிராக் அண்ட் டெல். வாட்ஸ் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் என்பவரது முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த டிராக் அண்ட் டெல், உங்கள் வாகனத்தில் பொருத்திவிட்டால் போதும்.
இதில் உள்ள ஜிபிஎஸ் கருவியின் மூலம் இந்த வாகனம் எங்கு உள்ளது, எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது உள்பட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். கார் வாங்கி வாடகைக்கு விட்டு உள்ளவர்களுக்கு இது ஒரு வரபிரசாதமான கண்டுபிடிப்பு. ரூ.5999க்கு கிடைக்கும் இந்த கருவி மிகப்பெரிய சேவையை செய்வதோடு, மூன்று வருடங்கள் கியாரண்டி சர்வீசும் தருகிறது.
இன்ஸ்ப்ரிராக் (Inspirock)
சுற்றுலா செல்பவர்கள் ஆங்காங்கே கைடுகளை அமர்த்தி அந்த பகுதியின் சிறப்பை தெரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும்.
ஆனால் இந்த இன்ஸ்ப்ரிராக், சுற்றுலா செல்பவர்களுக்கு தேவையான அனைத்து விபரங்களை தரும். நாம் செல்லும் சுற்றுலா பகுதியின் அனைத்து சிறப்பு அம்சங்களை நமக்கு தெரிவிப்பதோடு, அந்த பகுதிக்கு செல்லும் சுலபமான வழியையும் நமக்கு தெரிவிக்கும். எனவே இன்ஸ்ப்ரிராக் இருந்தால் கூட வே ஒரு கைடு இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும்
கார்டியாக் டிசைன் லேப்ஸ் (Cardiac Design Labs)
மருத்துவ துறைக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும் அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார்டியாக் டிசைன் லேப்ஸ், இந்தியாவின் சிறந்த கண்டுபிடிப்பு என்று கூகுள் நிறுவனமே பாராட்டி பரிசு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நோயாளிகளின் அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படுவதோடு, அவ்வப்போது நோயாளிகளின் நிலை, அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை டாக்டருக்கும் மருத்துவமனைக்கும் மொபைலில் நோட்டிபிகேசனை அனுப்பும்,.
இதனால் நோயாளிக்கு ஏதாவது முக்கிய பிரச்சனை என்றால் உடனே மருத்துவமனை மூலம் அவர் அழைக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொள்வார். கார்டியாக் டிசைன் லேப்ஸ் மூலம் நோயாளி எந்த நேரமும் மருத்துவரின் பார்வையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெஸ்ட் அவே (NestAway)
நெஸ்ட் அவே கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமானாலும் இளைஞர்களிடம் பெருமளவு பரவியது 2016ஆம் ஆண்டில்தான். ரத்தன் டாட்டா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த நெஸ்ட் அவே மூலம் எந்த நகரில் வேண்டுமானாலும் உங்களுக்கு தேவையான வீடுகளை பெற்றுக் கொள்ளலாம்.
குடும்பத்தினர்கள் தங்குவதற்கோ அல்லது பேச்சிலர்களுக்கோ வீடு வாடகைக்கு அல்லது விலைக்கு வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு பெரிதும் உதவுவது நெஸ்ட் அவே தான். இந்த இணையதளத்தில் பர்னிச்சருடன் கூடிய வீடு எங்கே கிடைக்கும் என்பதை படத்துடன் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் அந்த வீட்டின் மதிப்பு, வாடகை தொகை, அட்வான்ஸ் தொகை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நீங்கள் புரோக்கர் கமிஷன் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். தற்போது இந்த நெஸ்ட் அவே பெங்களூரு, ஐதராபாத், புனே மற்றும் டெல்லியில் செயல்பட்டு வருகிறது
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...