SPONSER

Monday, 19 December 2016

ரூ.22,500 கோடி பிரதமர் தருவாரா?

ரூ.22,500 கோடி பிரதமர் தருவாரா?







புதுடில்லி: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து புயல் நிவாரணமாக ரூ.22,573 கோடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 184 பக்கங்கள் அடங்கிய மனுவை அளித்தார்.
மாலை சந்திப்பு:




முதல்வர் ஜெயலலிதா, டிச.,5ம் தேதி இரவு, 11:30 மணிக்கு மரணமடைந்த பிறகு, பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. டிச.,12ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை, ‛வர்தா' புயல் தாக்கியது. இதன் பிறகு, மூன்று மாவட்டகளிலும் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தீவிர நிவாரண பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், அரசு செயலாளர் ஷீலா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட, எட்டு அதிகாரிகள் இன்று காலை டில்லி புறப்பட்டு சென்றனர். அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில், அ.தி.மு.க., - எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் மாலையில் பிரதமர் இல்லத்துக்கு சென்று, பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, தம்பிதுரை, ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளன. பல இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

ரூ. 22.573 கோடி தேவை

‛வர்தா' புயல் நிவாரணமாக, தமிழகத்திற்கு, 22 ஆயிரத்து, 573 கோடி ரூபாயை அளிக்கும்படி, பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். மேலும், உடனடியாக, ரூ.1,000 கோடியை வழங்க கோரியுள்ளோம்.

காவிரி விவகாரம்

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீட்டு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளோம்.

பாரத ரத்னா கோரிக்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். பார்லிமென்ட் வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.

பிரதமர் கோரிக்கை மனுவை படித்து பார்த்து ஆவணம் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...