ரூபாய் நோட்டு வாபஸ்; தோல்வி திட்டம்: ராகுல்
உத்திர பிரதேச மாநிலம் ஜவுன்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல், நேர்மையாக வரி செலுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது. நவம்பர் 8 ம் தேதி மோடி வெளியிட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிரானதே தவிர கறுப்பு பணத்திற்கு எதிரானத அல்ல. அனைத்து பணமும் கறுப்பு பணமல்ல. அதே சமயம் கறுப்பு பணம், பணமாக வைத்திருக்கப்படுவதில்லை.
மோடிக்கு எதிராக அரசியல் போர் நடத்துகிறோம். அதில் அவரை தோற்கடிப்போம். ஆனால் அவரை இழிவுபடுத்த மாட்டோம். ரூபாய் நோட்டு வாபஸ் முடிவால் 99 சதவீதம் நாட்டு மக்களின் அதிருப்தியை மோடி பெற்றுள்ளார். கடன் மற்றும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும், காய்கறிகளுக்கு சரியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற 3 விஷயங்களை விவசாயிகள் மோடியிடம் கேட்கிறார்கள். ஆனால் மோடி அவற்றை கண்டுகொள்வதில்லை.
கறுப்பு பணத்தை நீங்கள் ஒழிக்க விரும்பினால், முதலில் அது எங்கு உள்ளது, எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்டுபிடியுங்கள். பெரும்பாலான கறுப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதை மோடி அறிவார். இருந்தும் வெறும் 6 சதவீத கறுப்பு பணத்தை குறி வைத்து எதற்காக ரூபாய் நோட்டு வாபஸ் கொண்டு வந்துள்ளார் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...