SPONSER

Thursday, 15 December 2016

வளர்ச்சி குறைய வாய்ப்பு உள்ளதா?

வளர்ச்சி குறைய வாய்ப்பு உள்ளதா?


இன்று ஒரு பக்கம் சில்லரை கிடைக்காமல் புதிய, 2,000 ரூபாயை கிழித்த சில சம்பவம்டந்திருக்கிறது என்றால், வங்கி அதிகாரிகள், பெரிய பணக்காரர்கள் கோடிக்கணக்கில், 2,000 ரூபாய் கரன்சிகளை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள், பல அரசியல்வாதிகள், நாட்டின் மொத்த சதவீத வளர்ச்சி இனி குறைந்து விடும் என்கின்றனர். ஆனால், மோடியின் திடமான கருத்தோ, ஏழைகள், தற்போது கரன்சிக்காக, ஏ.டி.எம்., முன்பாக காத்திருக்கும் காலத்துடன், இந்த நாட்டில், 'கியூ' வரிசை ஓய்ந்து விடும் என்று அழுத்தமாக கூறுகிறார். அத்துடன், அவரது அமைச்சரவை சகாக்களும் ஒருசேர, 'நாடு டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறும் காலம் வந்து விட்டது' என்கின்றனர்.
பிளாஸ்டிக் கார்டு வைத்திருக்கும் பலரும் பணம் எடுக்க, அதை பயன்படுத்துவது அதிகம் நடக்கிறது. மற்ற சில வசதிகள் அல்லது சிறு வியாபாரிகள் புதிய பணப்பரிவர்த்தனைகளுக்கு விரைவில் மாறி, கரன்சி பரிமாற்றம் சுருங்க வேண்டும் என்பது அரசின் திடமான கருத்தாகும்.ஒரு மாதத்திற்கு முன் இருந்த அளவு கரன்சி புழக்கம், இச்செல்லாத நோட்டு அறிவிப்பு நடவடிக்கைக்கு பின், தொடர்ந்து இருக்காது. சொல்லப்போனால், புதிய கரன்சிகளை, ரிசர்வ் வங்கி தயாரித்து நிறைவு செய்யும் போது, இன்னும் ஒரு மாத காலத்தில், முந்தைய கால கட்டத்தில் புழங்கிய கரன்சியில், 15 சதவீதம் வரை எண்ணிக்கை குறைந்து விடும். இனி, 1,000 ரூபாய் கரன்சி வர வாய்ப்பில்லை. அதேசமயம், 2,000 ரூபாய் புதிய கரன்சியை முன்பு, 500 மற்றும் 1,000 ரூபாய் போல, கட்டுக்கட்டாக சிலர் வைத்திருக்க அதிக வாய்ப்பில்லை. ஆனால், ஆதார் அடையாள அட்டை, வங்கிகளில், கே.ஒய்.சி., என்றழைக்கப்படும், 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்' என்ற விபரம், வரி கட்டுவோர் என்றால், 'பான் கார்டு' ஆகிய விபரங்கள் சேரும் போது, வங்கிகள், எளிதாக மின்னணு பரிமாற்ற கருவிகளை சிறிய வியாபாரிகள் பயன்படுத்த எளிதாக அனுமதிக்கும். அதிலும் பயன்படுத்துவோர் தங்களது, 'பின்' வங்கி கணக்கு எண் ஆகியவற்றை மட்டும் அடிப்படையாக தெரிந்து கொண்டால் போதும் என்கிற கருத்தும் கூறப்படுகிறது.நம் நாட்டு மக்கள் தொகையை விட, கூடுதலாக மொபைல் எண்ணிக்கை இருப்பது இதற்கு சாதகமாகலாம். அதிலும், 'ஸ்மார்ட் போன்' வசதி உள்ளவர்களில், 25 சதவீதம் பேர், அதில் உள்ள நுட்பங்களை பயன்படுத்தி, பணப்பரிமாற்றம் உட்பட பொருளாதார வசதிகளை அடைவதில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல; மொபைல் பயன்படுத்துவதில், என்ன லாபம் என்றால், தினசரி கூலி தொழிலாளிக்கு உறுதியாக தரப்படும் சம்பளத்தில், கமிஷன் தொகையாக எடுத்துக்கொள்ளும் வழக்கம், வேளாண் பொருட்களுக்கு, இடைத்தரகர்கள் அதிக லாபம் காண்பது ஆகியவை குறையலாம். அதிலும், அப்பண பரிவர்த்தனைக்கு ஒரு வரம்பு இருக்கும் என்பது நல்லது, ஏமாற்றுவதற்கு வாய்ப்பில்லை. திடீர் பணக்காரர்கள், அதிக வசதி மிக்க வீடுகள், நவீன 'ஆடி' கார் ஆகிய வசதிகளுடன் பந்தாவாக இருக்கும் புதியவர்கள் எண்ணிக்கை தானாக குறையும். கட்சிகளுக்கும், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தருபவர் குறித்த தகவல்களும் எளிதாக கண்டறிய முடியும். மோடியின் கரன்சி அதிரடி முடிவுகள் தன்னிச்சையாக ஒரு நபரின் முடிவு என்று, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறுகின்றன. ஆனால், இத்திட்டத்தை அமல்படுத்துவதில் ரகசியம் காத்தது, அதற்கு பின் அடுத்த, 20 நாட்களில் அறிவித்த சீர்திருத்த அறிவிப்புகள், அதிலும், 'ஜன்தன்' கணக்கில், அதிக ஆயிரம் கோடிகள் புரண்டதும், அதற்கு செக் வைத்த விதம், அதேநேரம், ஊழல்கள் பலவற்றை கண்டுபிடிக்க நடத்திய சோதனைகள் எல்லாம் கட்சிகள் எதிர்பார்க்காதவை. 'நிடி ஆயோக்' அமைப்பின் மூத்த உறுப்பினர், விவேக் ராய் வெளிப்படையாக, 'கறுப்புப் பணம் எவ்வளவு இருக்கிறது என்பதற்கு புள்ளி விபரம் கிடையாது' என்றிருக்கிறார். தவிரவும் நிலபேர ஊழல், பினாமி சொத்துக்கள், தங்கத்தை அளவுக்கதிகமாக சேர்த்து வைத்திருத்தல், என்று பல பரிமாணங்களுடன், தற்போது அமலான திட்டம் ஏழைகளை சாக வைக்காது என்பது உண்மை. அதைவிட, ரகசிய இடங்களில் உள்ள கரன்சிகளுக்கும், மொத்த வளர்ச்சியை குறியீடுகளை கண்காணிக்கும் அம்சங்களுக்கும் தொடர்பில்லை. ஜி.எஸ்.டி., என்றழைக்கப்படும் சரக்கு சேவை வரி அமலும் சேர்ந்து பயன் தரும் போது, வரி ஏய்ப்பு ஆதிக்கமும் குறையும். இவற்றை மத்திய பட்ஜெட் பிரதிபலித்தால் நல்லது.
 N                          

x

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...