2016ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு பொற்காலம் என்றே கூறலாம். இந்திய சந்தை உள்பட உலகின் ஸ்மார்ட்போன் சந்தையில் பலவிதமான மாடல்கள் வெளிவந்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று பெரும் லாபம் சம்பாதித்தன.
ஆனால் அதே நேரத்தில் ஒருசில மாடல்கள் வாடிக்கையாளர்களின் அதிருப்தி காரணமாக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து தோல்வி அடைந்த மாடல்களாக கேலக்சி S7, S7 எட்ஜ், ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் ஆகியவை இருந்தன. கூகுள் பிக்சல் போனும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
பேஸ்புக் போன்றே வாட்ஸ்ஆப்பில் சாட் ஹெட்ஸ் பெறுவது எப்படி.?
பேஸ்புக் போன்றே வாட்ஸ்ஆப்பில் சாட் ஹெட்ஸ் பெறுவது எப்படி.?
இந்நிலையில் இந்த மாடல்கள் தவிர மேலும் சில மாடல்கள் சந்தையின் கடுமையான போட்டி, சிறுசிறு குறைகள், விலை அதிகம், கவர்ச்சியற்ற மாடல்கள் ஆகியவை காரணமாக கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டன. அவ்வாறு கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட ஐந்து மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
எல்ஜி V20:
எல்.ஜி நிறுவனத்தின் வெற்றி பெற்ற மாடலான எல்.ஜி G5 மாடலுக்கு பின்னர் வெளிவந்ததால் இந்த மாடலுக்கும் பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை மெய்ப்பிப்பது போல் இந்த போனுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் வெளிவந்தன.
நல்ல பவர்புல் கேமிரா, தரமான ஆடியோ, கவர்ச்சியான தெளிவான டிஸ்ப்ளே, ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இருந்த இந்த போன் ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்றாலும், கூகுளின் பிக்சல் போன் வெளிவர தொடங்கியதும் இந்த போனின் மதிப்பு குறைந்தது. அதன் பின்னர் இந்த போன் கவனிக்கப்படாத ஸ்மார்ட்போன் மாடலாக மாறிவிட்டது.
லெனோவா Z2 ப்ளஸ்:
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள லெனோவா நிறுவனம் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் அடங்கிய லெனோவா Z ப்ளஸ் மாடலை இந்த ஆண்டு வெளியிட்டது. இந்த போனின் விலை ரூ.20000க்கு குறைவாக இருந்தது மற்றும் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஹார்ட்வேர் இருந்ததால் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றாது.
ஆனால் இந்த போனை விட விலையிலும் டெக்னாலஜியிலும் சிறந்ததாக கருதப்பட ஒன்ப்ளஸ் 3 மற்றும் சியாமி மி 5 ஆகிய மாடல்கள் வெளிவந்தவுடன் லெனோவா Z ப்ளஸ் மாடலின் விற்பனை வீழ்ச்சி அடைந்து கவனிக்கப்படாத ஸ்மார்ட்போன் மாடலில் இணைந்தது.
HTC 10:
HTC ஒன் M9 மாடலுக்கு பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த HTC 10 மாடலும் ஆரம்பத்தில் வரவேற்கப்பட்ட நிலையில் அந்த வரவேற்பு அதிக காலம் நீட்டிக்கவில்லை.
டெக்னாலஜியாளர்கள் இந்த போனுக்கு நல்ல விமர்சனங்கள் கொடுத்த போதிலும் போதிய விளம்பரம் இல்லாமை, சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளின் தீவிர செயல்பாட்டின்மை காரணமாக இந்த மாடல் குறித்து தகவல்கள் பொதுமக்களிடம் போய் சேரவில்லை. ஆனால் இந்த மாடல் கண்டிப்பாக இதன் விலையை விட அதிக மதிப்புடையது என்பதில் சந்தேகம் இல்லை.
ஹூவேய் P9 (Huawei P 9)
டூயல் கேமிராவுடன் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டு வெளிவந்து பெய்லியர் ஆன மாடல்களில் ஒன்று இந்த ஹூவேய் P9 . மூன்று மாதங்கள் இந்த போனுக்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தபோதிலும், ஹூவேய் நிறுவனம் போதுமான விளம்பரம் செய்து ஸ்மார்ட்போன் வாங்கும் பொதுமக்களை ஈர்க்க தவறிவிட்டது. நல்ல போனாக இருந்தாலும் நல்ல மார்க்கெட்டிங் இல்லை என்றால் ஸ்மார்ட்போன் சந்தையின் போட்டியை சமாளித்து வெற்றி பெற முடியாது என்பதற்கு இந்த மாடல் ஒரு நல்ல உதாரணம்
மோட்டோரோலோ மோட்டோ Z பிளே
இன்று வரை அதிக காலம் சார்ஜ் நிற்கும் ஸ்மார்ட்போன் மாடல் மோட்டோரோலோ மோட்டோ Z பிளே மாடல்தான் என்பதை அனைவரும் ஏற்று கொண்டுள்ளனர். ஆனால் இந்த போனில் நவீன டெக்னாலஜி, சார்ஜ் திறன் இருந்தாலும் இதன் விலையை தவறாக மோட்டோரோலோ நிர்ணயம் செய்துவிட்டதாகவே பலர் கருதின. ரூ.24,999க்கு இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் இதைவிட ரூ.5000 குறைவாக இதே வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் மாடல் இதற்கு போட்டியாக வந்ததால் வந்த வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிய மாடல்களில் ஒன்றாக இந்த மோட்டோரோலோ மோட்டோ Z பிளே அமைந்துவிட்டது. ஆனாலும் விலை உயர்வை கண்டுகொள்ளாமல் ஒரு நல்ல, தரமான ஸ்மார்ட்போன் தேவை உள்ளவர்கள் இப்பொழுதும் இந்த போனை நாடி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...